ஓடிடி தளங்களில் ஆயிரக்கணக்கில் வெப் சீரீஸ்கள் இருக்கின்றன. அவற்றில், அனைவருக்கும் தெரிந்த, பிரபலமான சீரீஸ்கள் தவிர்த்து, பலருக்கும் தெரியாத அட்டகாசமான சீரீஸ்கள் பற்றியும் அவற்றை எடுத்தவர்கள் பற்றியும் கருந்தேள் ராஜேஷ் எழுதியிருக்கும் சினிமா ரசனை 2.0 விரிவாகப் பேசுகிறது. இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியாகிப் பரவலான பாராட்டுப் பெற்ற தொடர் இது. சில ஆண்டுகள் முன்னர் இந்து தமிழில் சினிமா ரசனை என்ற தொடரை கருந்தேள் ராஜேஷ் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, வெப் சீரீஸ்கள் பற்றியும் அவற்றின் வித்தியாசமான உள்ளடக்கங்கள் பற்றியும் கருந்தேள் ராஜேஷ் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், அவசியம் படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகைக் காட்டும்.
கருந்தேள் ராஜேஷ், தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராகவும் திரைக்கதை கன்சல்டண்ட்டாகவும் இருக்கிறார்.
Be the first to rate this book.