உலக அளவில் பைபிளுக்கு அடுத்த படியாக அதிகமாய் வாசிக்கப்பட்டு வரும் "இமிடேஷன் ஆஃப் கிரைஸ்ட்" என்ற ஆங்கில நூல், ஏறக்குறைய நூறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான பதிப்புகளைக் கண்டுள்ளது.
தற்போதைய ஜெர்மனியில் பிறந்த தாமஸ் கெம்பிஸ் எனும் குருவானவர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் இதை இலத்தீன் மொழியில் எழுதினார். 1471 ஆம் ஆண்டு இது முதன் முதலில் அச்சுவடிவம் பெற்றது. கிறிஸ்தவத்தின் எல்லாப் பிரிவு மக்களாலும் விரும்பி வாசிக்கப்படும் ஒரே நூல் இது தான்.
லயோலாவின் புனித இக்னேஷியஸ், ஜான் வெஸ்லி, அன்னை தெரசா, போப் இரண்டாம் ஜான்பால் என இந்த நூல் வசீகரித்த ஆன்மிகத் தலைவர்களின் பட்டியல் வியப்பானது. இந்த நூல் கிறிஸ்தவர்களுக்கு ஆன்மிகத் தெளிவையும், மற்றவர்களுக்கு வாழ்வியல் செறிவையும் வழங்குகிறது.
சுவாமி விவேகானந்தர் இந்த நூலின் ஒரு பகுதியை வங்காளத்தில் மொழி பெயர்த்தார் என்பது நூலினை இன்னும் சிறப்பாக்குகிறது.
தமிழில் வெளிவருகின்ற எளிமையான முதல் மொழிபெயர்ப்பு இது என்பது குறிப்பிடத் தக்கது. இதை மொழிபெயர்த்துள்ள சேவியர் கிறிஸ்தவ இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
Be the first to rate this book.