வரலாறு அறிய முதன்மை ஆதாரங்களான கல்வெட்டுகள், செப்பேடுகள், கோயில்கள் முதலியன இல்லாத காலத்தில் இலக்கியமே முதன்மை ஆதாரமாக இருக்கிறது. வித்துவான் மா. இராசமாணிக்கம், சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு சங்க காலச் சோழர்கள் குறித்து எழுதியுள்ள நூலே சோழர் வரலாறு.
கரிகாற் பெருவளத்தான் என்றழைக்கப்பட்ட மன்னன் யார், கல்லணை கட்டிய கரிகாலனும் இவனும் ஒன்றா? கரிகாலன் என்ற பெயரில் இருந்த அரசர்கள் யார் யார்? போன்ற கேள்விகளுக்கு இலக்கியங்களை நுணுகி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.
கி.மு.நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர், கி.மு.நூற்றாண்டுச் சோழன். கி.மு.2ஆம் நூற்றாண்டுச் சோழர், கி.மு.முதல் நூற்றாண்டுச் சோழர், கி.பி. 1 முதல் கி.பி.150 வரை இருந்த சோழர்கள். கி.பி. 150 300 வரை இருந்த சோழர்கள் எனக் காலம் பிரித்து நூலாசிரியர் எழுதியுள்ளதில் நுட்பமான ஆய்வு வழியும் புலப்படுகிறது.
சங்க காலச் சோழர் காலத்தில் மக்கள் வாழ்வியல், இசையும் கூத்தும், கடல் வாணிகம், சங்க காலத் தெய்வங்கள், கோவில்கள். இறந்தவர்களைச் சுடுதல், இடுதல் முறைகள் எல்லாம் விளக்குகிறார். வரலாற்று நோக்கில் இலக்கியத்தை அணுகும்போது, இலக்கியம் பெறும் புதுப் புரிதல் வெகு சுவாரசியமானது என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
Be the first to rate this book.