தற்கால சிறார் இலக்கியத்தில் புரிதலை மையமாகக் கொண்டு படைப்புகள் வெளிவருகின்றன. குழந்தைகளுக்கு எதைச் சொல்லவேண்டும், சிறார்களுக்கு எதைச் சொன்னால் அவர்களுக்குப் புரியும் என்ற வகையில் படைப்புகள் வருவது சிறார் இலக்கியச் சூழலை ஆழமாக்குகிறது. அந்த வகையில் இவர் ஆசிரியர் என்பதால் அதிகப்பட்சமாக மாணாக்கர்களின் மனநிலையை நன்கு உணர்ந்திருக்கிறார். அவர்களின் உலகம் எப்படி இருக்கும் என்பதை நுண்ணியப் பார்வையால் காட்சிப் படுத்துகிறார். ஒரு சில கதைகளில் நகைச்சுவை இழையோடி இருப்பது வரவேற்புக்குரியது.
ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை, இவரின் படைப்புகள் 'தினசரி.காம்', 'மஞ்சரி', 'கலைமகள்', 'குவிகம் மின்னிதழ்', 'கேலக்ஸி தளம்', 'நமது உரத்த சிந்தனை', 'மலர்வனம்'. 'பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ்', 'மங்கையர்மலர்', 'கோகுலம்'. "இந்து தமிழ்திசையின் மாயாபஜார்', 'சிறுவர் வனம்', 'சொல்வனம்'. 'தினமலர் பட்டம்', 'ஆனந்தசந்திரிகை', 'நடுகல் மின்னிதழ்' போன்ற பல்வேறு தளங்களில் வெளிவந்துள்ளன.
இவரது "மங்கை எனும் மந்திர தீபம்" எனும் மொழிபெயர்ப்பு நூலும் "இந்துமதி கல்யாணம் எப்போ?" என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய 'திருப்பூர் சக்தி விருது' இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.
Be the first to rate this book.