நேர்த்தியாக விழுந்துவிடாமல் சீட்டுக்கட்டுகளை பொறுமையாக ஒன்றன்மேல் ஒன்றாகக் கோபுரம்போல் அடுக்கிக் கடைசியில் அவற்றை வரிசையாய்த் தள்ளிவிட்டுக் குதூகலிக்கும் விளையாட்டினைப் போலல்லவா இருக்கிறது என் நிலைமை, பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் உன்மீதான காதலை இப்படி ஒரே மூச்சில் ஊதித் தள்ளிவிட்டாயே செல்லம்மா. அது வீழ்ந்தாலும் உன் நினைவே அதில் தெரிகிறதென்பதை நீ உணரவில்லையா. எவ்வளவு முட்டாளாக இருந்துவிட்டேன். உன்னிடம் என்று என் காதலைச் சொல்லவேண்டுமென்று நான் காத்திருந்தேனோ அன்றுதானா அவனும் அதே முடிவை எடுத்திருக்க வேண்டும். என்னை நினைத்தால் எனக்கே சிரிப்புதான் வருகிறது செல்லம்மா.
Be the first to rate this book.