2007ம் ஆண்டு இன்ஜினியரிங் என்பது மிகப்பெரிய படிப்பாய் பார்க்கப்பட்ட காலத்தில், தனக்கு இன்ஜினியரிங் படிப்பதில் விருப்பம் இல்லை என்று இரண்டாண்டுகள் இன்ஜினியரிங் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு இலக்கியம் எடுத்துப் படிக்க அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தார் நவீன். படித்த மூன்று ஆண்டுகள் இலக்கியத்தின் மீதுள்ள தீவிர ஆர்வத்தால் நன்றாகப் படித்து, பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தங்கப்பதக்கம் பெற்றார். எங்களுடன் அமெரிக்கன் கல்லூரியில் படித்த மூன்று ஆண்டுகளும் படிப்பு, இசை, பாட்டு, கவிதை, எழுத்து, பத்திரிக்கை, ரேடியோ, கலை நிகழ்வுகள், நாடகம், தொலைக்காட்சி போட்டிகள் என பல துறைகளில் சிறந்தவராய் விளங்கினார்.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஓர் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற முனைப்பில் படித்த நவீன், SSC நடத்திய பிரசார் பாரதி Transmission Executive Officer உள்ளிட்ட பல போட்டித் தேர்வுகளில் வென்றார். இருப்பினும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வானபின், தான் ஒரு ஆசிரியராகவே இருக்க ஆசைப்பட்டு 2014 முதல் இன்றுவரை அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
கடந்த பத்தாண்டுகளில் சிறப்பான ஆசிரியராக செயல்பட்டுவரும் இவர், அரசுப் பொதுத்தேர்வுகளில் தன்னிடம் படிக்கும் மாணவர்களை நூறு சதவிகிதம் தேர்ச்சி கொடுத்தே அனுப்புகிறார். மேலும் பள்ளிப் படிப்பை முடித்த சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்கிறார். கல்லூரி முடித்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கி உதவுகிறார்.
நிறைய நம்பிக்கையினையும் புத்துணர்வையும் அளிக்கும் இப்புத்தகம் வெற்றிபெற என் வாழ்த்துகள்!
-ஜெனோ,
ஆங்கிலப் பேராசிரியர், அமெரிக்கன் கல்லூரி,
மதுரை
Be the first to rate this book.