என்னுடைய படைகள் பத்தொன்பது ஆண்டுகளாக அவருடன் மோதின. அப்படியிருந்தும் அவரது சாம்ராஜ்யம் விரிவடைந்து வந்தது.
- மாமன்னர் ஔரங்கசீப்
அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நின்ற மாராட்டிய மன்னனின் போராட்டக் கதை. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆபத்தையும், சூழ்ச்சியையும், வஞ்சனையையும், சோதனையையும் சந்தித்து வந்த போதும் மனம் தளராமல், வீரத்துடனும், துணிச்சலுடனும், தந்திரத்துடனும், தொலைநோக்குடனும், கூரிய அறிவுடனும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறிய சிவாஜியின் இந்த சாகசக்கதையில் சுவாரசியத்திற்கும், திடீர்த் திருப்பங்களுக்கும், பிரமிப்புக்கும், மனநெகிழ்வுக்கும் பஞ்சமில்லை. பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்து ராஜ்ஜியம் ஆளும் நிலைக்கு உயர்ந்த ஒரு மகத்தான வீரனின் வரலாறு.
Be the first to rate this book.