இவரது முதல் நாவலான சந்திரகிரி இதீரதள்ளி (சந்திரகிரி ஆற்றங்கரையில்) பெண்களுக்கு எதிரான முத்தலாக் முறையைக் கேள்விகேட்டது. இதன் விளைவாக சொந்த மதமே சாராவை ஒதுக்கியது. 1985 ஜனவரியில் புத்தூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்குப் பேச வந்த சாராவை இஸ்லாமிய ஆண்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர். இந்த முயற்சி அவரை இன்னும் உறுதியாக்கியது. அதே ஆண்டு அவரின் கணவர் இறந்துபோனார். ஆனால். ஷாஹ்பானோ வழக்கு நாடுமுழுக்கப் பேசப்பட இஸ்லாமியப் பெண்களுக்கான குரலாக தான் மீண்டெழவேண்டும் என மீண்டும் எழுதத் தொடங்கினார். பெண்களுக்கு எதிராக இஸ்லாமிலுள்ள சட்டதிட்டங்களை எதிர்த்துக் கேள்வியெழுப்பினார். தொடர் குழந்தைப்பேறு, பிள்ளைகளால் கைவிடப்படுதல். மதக் கலவரம், ஏழ்மையின் பிரச்னைகள், லஞ்சம் உள்ளிட்ட பல பொருண்மைகளில் இவரின் படைப்புகள் அமைந்தன. இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் இவர் தன் நாவல்களில் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
Be the first to rate this book.