நாம் அனைவரும் சில சமயங்களில் சிக்கிக்கொண்டதாய் உணர்கிறோம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் - வேலையில் உள்ளப் பிரச்சனைகள், மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கை, நிதி பிரச்சனைகள் அல்லது சங்கடமான சமூக சூழ்நிலைகள். இந்தச் சூழ்நிலைகளில் நம்மில் பெரும்பாலோர் ஒரு சில ஆலோசனையைப் பயன்படுத்தலாம். வாழ்க்கையின் பல கடினமான சவால்களை எதிர்கொள்ள சாணக்கிய நீதி துல்லியமாய் வழிகாட்டுகிறது.
சிறந்த சிந்தனையாளரும் ஆசிரியருமான சாணக்கியர். முன்னுரிமை பெற்றவர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் பற்றிய அவரது நுண்ணறிவுக்காய் நன்கு அறியப்பட்டவர்.
அசல் சாணக்கிய நீதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ஆனால் அதன் அற்புதமான பாக்கள் இன்றும் பொருத்தமாய் உள்ளன. ஏனென்றால், மனிதனின் அடிப்படை தேடல்கள் ஒரே மாதிரியாய் இருக்கின்றன அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி,
இந்தத் தொகுதியில், சாணக்கியரின் கூர்.அறிவான மற்றும் நடைமுறை மூதுரைகளின் நவீன விளக்கத்தை, இராதாகிருஷ்ணன் பிள்ளை, பின்பற்ற எளிதான மற்றும் நேர்த்தியான உரைநடை குணாதிசயத்துடன் வழங்குகிறார்.
சிக்கலின் வலையிலிருந்து விடுபட்டு, உங்கள் விதிமுறைகளின்படி நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உருவாக்க சாணக்கியரின் ஞானத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
Be the first to rate this book.