கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சாணக்கியர் ஒரு ஒப்பற்ற தலைமை குரு. அவருடைய பொக்கிஷமாம் பாடங்கள் அவருடைய அர்த்தசாஸ்திரம் என்ற நூலில் காணப்படுகிறது. அது சீரிய தலைமைத் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு நாட்டை எப்படி சிறப்பாக ஆளுவது என்பதை விளக்குகிறது.
ஒரு தேசத்தின் சீர்மையான வளர்ச்சிக்கு சப்தாங்கம் என்றழைக்கப்படும் கொள்கை அவசியம் என்று அர்த்தசாஸ்திரம் உரைக்கிறது. சுவாமி, அமாத்தியர், ஜன்பதா, துர்க், கோஷா, தண்ட், மித்ரா என்பன ஒரு நல்லாட்சியின் ஏழு தூண்கள். பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் அரசர்கள் இந்தக் கொள்கையை ஒரு வெற்றிகரமான அரசாட்சியின் மாதிரியாகப் போற்றி வந்திருக்கிறார்கள்.
சாணக்கியரின் 7 தலைமை ரகசியங்கள் என்ற புதிய வழி காட்டும் இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் ராதாகிருஷ்ணன் பிள்ளை, மஹாராஷ்டராவின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் டி.சிவானந்தனின் நிஜ வாழ்க்கை உதாரணத்தின் மூலமாக சாணக்கியரின் சப்தாங்கத்தை விளக்குகிறார். சிறப்பான நிர்வாகத்தின் மறு உருவமாக விளங்கும் திரு. சிவானந்தன் இயக்கமிகு தலைவரை உருவாக்கும் சிறப்பியல்புகளை எடுத்துக்காட்டி ஆக்கபூர்வமான மேலாண்மைக்கு வழிகாட்டுதல்களை நல்குகிறார்.
சாணக்கியரின் 7 தலைமை ரகசியங்கள் புத்தகத்தில் நடைமுறைகளை தேற்றம் விளக்குகிறது, போலீஸ் மேற்பார்வையின் பரந்த அனுபவத்தை கல்வி ஆராய்ச்சி விளக்குகிறது. தொன்று தொட்டு வழங்கிவரும் சூத்திரங்கள் நவீன கால வெற்றியின் மூலமாக விளக்கப்படுகின்றன. பிள்ளையும் சிவானந்தனும் இணைந்து சாணக்கியரின் மாதிரிக்கு உயிர் கொடுக்கிறார்கள்.
ஒரு அரசாட்சியை சீரும் சிறப்புமாக நடத்துவதற்கு தலைமையின் ஏழு ரகசியங்களை எவரும் பயன்படுத்தலாம். இவைகளை உங்கள் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். சாணக்கியரின் ஞானமெனும் மந்திரம் உங்களை ஒரு சிறந்த தலைவராக உருவாக்கும்.
Be the first to rate this book.