அயர்லாந்தில் பிறந்து கிருஸ்தவ சங்கத் தொண்டராய் ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தெட்டாம் ஆண்டில் சென்னை நகர் வந்துசேர்ந்தவர் கால்டுவெல். தம் இருபத்து மூன்றாவது வயது தொடங்கி ஐம்பத்து மூன்று ஆண்டுகள் தமிழ் நாட்டில் அருந்தொண்டு புரிந்தார். இவர் திருநெல்வேலி நாட்டிலுள்ள இடையன்குடி என்னும் சிற்றூரை இருப்பிடமாகக் கொண்டார். நெல்லைநாடு அவரைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டது. இங்ஙனம் தம்மை ஏற்றுக்கொண்ட நெல்லை நாட்டிற்குச் சிறந்த முறையில் நன்றி செலுத்தும் வகையில், திருநெல்வேலி நாட்டுச் சரித்திரத்தை வரன் முறையாக முதன் முதல் எழுதியவர் இவரே.
Be the first to rate this book.