என் அன்பிற்குரிய கவிஞர் தமிழ்மகன் இங்கு வழதியுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும், தைய நதியின் ஈ நீரோட்டம்: இனிய தமிழின் தேரோட்டம்: புதிய சமுதாயம் படைக்கப் புறப்படும் போராட்டம்.
வளமான சொற்கள், வாகான வடிவம்... இவை வேருக்கு வாய்த்திருக்கும் வரப்பிரசாதம்.
குமுறியும். துள்ளியும், குதித்தும் கொடிபிடித்து நடந்துவரும் இவருடைய உணர்ச்சிகள். தமிழுக்குக் கிடைத்த உற்சவ ஊர்வலம்.
புதிய கவிஞர் என்று சொல்ல முடியாதபடி. இவருடைய அரிய கவிதைகள் அமைந்துள்ளன.
தீர்க்கமான பார்வை, பிளக்கமுடியாத பீரங்கிக் கருத்துகள்... இவை இங்கே பின்னிக்கிடக்கின்றன.
சமுதாயத்தைத் துக்கித் தன் நெஞ்சத் தராசில் நிறுத்துப் பார்க்கிற கவிதா தர்மம் இவருடைய குளிர்ந்த இதயத்தில் கொலு வீற்றிருக்கிறது.
பூமியைப் புதுமை செய்யப் புறப்படும் எழுதுகோல், இந்த இளைஞரின் கைகளில் இருப்பதைப் புரிந்துகொள்கிறேன்.
தமிழிலக்கியத்தில் இந்த தணல் யாத்திரைக் கவிஞனின் பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
மு.மேத்தா.
Be the first to rate this book.