நீங்கள் படிக்கவிரும்பும் புத்தகம் இருந்தால், அது இன்னும் எழுதப்படவில்லை என்றாயல் , நீங்கள் அதை எழுத வேண்டும் என்கிறார் எழுத்தாளர் டோனி மாரிசன் . குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் அவர்களுடைய கதைகள் இல்லாதபோது, ஓர் ஏழை ஆசிரியர் என்ன செய்வார்? 'பொம்மை ராஜா' எழுதுவார்.
இவை வெறும் மாணவர்கள் பற்றிய கவிதைகள் மட்டுமல்ல. தம் தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில் உருவாக்கப்படுகிறது என்பது உண்மையானால், இது நம் நாட்டைப் பற்றிய கவிதைகளும் அல்லவா?
ஒரு சமூகம் தன் குழந்தைகளை நடத்தும் விதத்தை விட, அதன் ஆன்மாவை வெளிப்படுத்தும் செயல், வேறு எதுவும் இருக்க முடியாது! என்பது நெல்சன் மண்டேலாவின் கூற்று. ஸ்டாலின் நமது சமூகத்தின் ஆன்மாவை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Be the first to rate this book.