இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் அத்தனையும் கற்பனை எல்லைத் தாண்டாத, எதார்த்தம் மீறாத. வாழ்வியல் கதைகள். கதை முழுக்கவும் இஸ்லாமிய மாந்தர்கள், அவர்களின் இன்பம், துன்பம். ஏக்கம். வெட்கம், வெகுளி சார்ந்த பதிவுகள்.
தன் வாழ்வையும் தன்னைச் சுற்றியுள்ள வாழ்வையும் பதிவு செய்வதே நல்ல படைப்பின் இலக்கணம். அத்தகைய இலக்கணத்தைக் கொண்டு சொல்நேர்த்தி, கதைநேர்த்தியால் தேர்ந்து புனைவாகியுள்ளது.
-அண்டனூர் சுரா
முஸ்லிம் சமுதாயத்தைக் குறித்த தவறான மதிப்பீடுகள் உருவாகக் காரணங்கள் முஸ்லிம்களின் வாழ்வியலும், கருத்தியலும் முறையாக வெளிப்படுத்தப்படாமையும், தவறாகச் சித்தரிக்கப்படுவதுமே ஆகும். அரும்பாவூர் தாஹிர் பாட்சா எழுதியுள்ள சிறுகதைகள் சமூக உறவுகளை பேணிக்காக்கும் கூறுகளாகவும் பண்பாடுகளுக்கிடைபட்ட பாலங்களாகவும் திகழ்பவை என்றால் மிகையில்லை.
-பேரா.முனைவர் ஜெ. ஹாஜாசுனி
Be the first to rate this book.