தேசத்தையும் தெய்வத்தையும் ஒருங்கே போற்றும் மகாகவியே பாரதி. சேலத்தில் சமுதாயமும், தெய்வ நம்பிக்கையில் பக்தியும் ஒளிர கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிய மறுமலர்ச்சிக் கவிஞராகப் பாரதி திகழ்கிறார். பாரதிக்குப்பின் பாரதியைப் பற்றிப் பாடாத கவிஞரோ, மேடை பேச்சாளரோ இல்லை எனலாம். அந்த அளவுக்குத் தமிழோடு கலந்தவர் பாரதியார். அவர் காலத்தில் உலக அளவில் நிலவிய விடுதலை உணர்வுகளால் உந்தப்பட்ட பாரதியார் விடுதலைக்காக நிகழ்ந்த புரட்சிகள் பற்றித் தமது யாத்திரிகை எழுதியவர். அவர் காலத்தில் நிலவிய புரட்சி இயக்கங்கள், அவை பற்றிய பாரதியின் கருத்துக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து எழுதப்பட்டதே பாரதியும் புரட்சி இயக்கமும்' என்ற இந்த நூல். சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவுகளே இந்த நூலாகி 1989இல் முதற்பதிப்பைக் கண்டுள்ளது.
Be the first to rate this book.