இத்தகையார் எழுதிய பாரதி சரித்திரம் தமிழருக்கு ஒரு புதிய பொக்கிஷமாகும். இந்த நூல் இக்காலத்திற்கு ஏற்றபடி பேச்சு நடையில் மிகவும் உருக்கமாக எழுதப் பெற்றுள்ளது. பாரதியாரின் காதல், வீரம், தியாகம், நாட்டன்பு, தமிழன்பு, தைரியம், தாராளசித்தம், ஈகை. சமத்துவம், கவிதா சக்தி, அன்பு முதலிய குணங்களைப் படம் பிடித்ததுபோல்அம்மையார் எடுத்துக்காட்டியிருக்கிறார்.ஸ்ரீ வ.வே.சு.ஐயர் வாழ்க்கையில் நடந்த இரண்டு வீரச் சம்பவங்களும் நூலிடையே வருகின்றன. இது பாரதி சகாப்தம். பாரதி சகாப்தத்தில் வாழும் ஒவ்வொரு தமிழரும் இந்த இனிய நூலை வாங்கிப் படிக்க வேண்டும். நேரே நின்று பேசுவதுபோல் அவ்வளவு சரளமாக இந்த நூலை எழுதியளித்த ஸ்ரீமதி பாரதிக்குத் தமிழர்கள் நன்றி செலுத்தக்கடமைப்பட்டிருக்கிறார்கள்.
பாரதி வாழ்க! எந்தாய் வாழ்க!
-சுத்தானந்த பாரதி
Be the first to rate this book.