இந்நூல் நமது மகாகவி பாரதியையும் ஆங்கில நாட்டு மகாகவி ஷெல்லியையும் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆராய்ச்சியாகும்.
மேல்நாட்டுக் கவிஞர்கள் பலரிலும், பாரதியின் இதயத்தைப் பெரிதும் பறித்து, எண்ணத்தைப் பெரிதும் பக்குவப் படுத்திய ஒரே கவிஞன் ஷெல்லிதான். பாரதி தனது இலக்கிய வாழ்வில் முதன் முதலில் புனைந்து கொண்ட புனைபெயரே ஷெல்லிதாசன்'
என்பதை அவனது வரலாற்றை அறிந்த தமிழன்பர்கள் அறிவார்கள்.
அந்த அளவுக்கு ஷெல்லியிடம் பாரதிக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. பாரதியைப் போலவே ஷெல்லியும் பெரும் புரட்சிக் கவிஞன்தான். எனவே புரட்சி இலக்கியப் பாரம்பரியத்தில் தனக்கு மூத்தோனும் முதல்வனுமாக இருந்த ஷெல்லியிடம் பாரதி ஈடுபாடு கொண்டிருந்தது வியப்பல்ல. எனினும் இந்த இரு பெருங் கவிஞர்களையும் விரிவாக ஒப்புநோக்கிக் காணும் முயற்சி தமிழில் இதுவரையிலும் இல்லை. இந்நூல் அத்தகையதொரு முயற்சிதான்.
Be the first to rate this book.