புகழ்பெற்ற நாடகாசிரியன் பாஸனின் நாடகங்களில் 'பிரதிக்ஞா யௌகந்தராயணம்' (யௌகந்தராயணனின் சபதங்கள்) 'ஸ்வப்பன வாசவதத்தை' (வாசவதத்தையின் கனவு) என்கிற இருநாடகங்கள் இங்கே நூலாக்கம் கண்டுள்ளன.
இவ்விரு நாடகங்களின் கதைக்கருக்கள் (கதா பீஜங்கள்) ஒன்றோடொன்று தொடர்புடையதால் இவை இரட்டை நாடகங்களெனவும் அழைக்கப்பட்டன. விந்திய மலைப்பகுதியில் வாழும் ஒரு பழங்குடியினர் மத்தியில் புழக்கத்திலிருந்த பைசாகி மொழியில் குணாதயர் என்பவரால் எழுதப்பெற்றதுதாம் பிருஹத் கதை என்பது.
வைதீக மரபு அதிக ஆர்வங்காட்டாத சிரமண மரபினரால் அதிகம் எடுத்துக் கையாளப்பட்ட தொன்மங்களிலொன்றுதான் இந்த 'பிருமத கதை'. பாலன் இத்தொன்மக் கதையாடலைத்தான் நாடகமாக்கியுள்ளான்.
தமிழின் ஐஞ்சிறுங்காப்பியங்களிலொன்றான பெருங்கதை அல்லது உதயணன் கதையென்பது இந்த 'பிருஹத் கதை'யினை அடியொற்றி எழுதப்பட்டதே.
பெருங்கதையில் உதயணனின் தண்பனாகவும் அமைச்சனாகவும் வருகிற யூகி என்பவன்தாம் வடமொழியில் 'யௌகந்தராயணன்" என அழைக்கப்படுகிறான், உதயணனின் காதல் இணையாள் 'வாசவதத்தை' தமிழிலும் அதேபெயரில் சுட்டப்படுகிறான்.
நமக்குக் கிடைக்கிற வடமொழி இலக்கியங்கள் பலவும் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்த ஒலைச்சுவடிகள் "திருவனந்தபுரம் சமஸ்கிருதத் தொகுப்புகள் (Trivandrum Sanskrit Senes) என்ற பெயரில் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் அச்சாக்கம் பெற்றபோது வாசிக்கக்கிட்டியவைதாம்.
பாஸனின் 13 நாடகங்களும் அப்போதுதான் வெளியுலகிற்கு தெரியலாயின. உண்மையில் இந்நாடகங்கள் 'பாஸன் 'பாஸன்' எழுதியவைதாமா, இல்லை கேரளத்தின் சாக்கியர்கள் எழுதி பாஸனின் பெயரை வைத்துவிட்டார்களா என்கிற கேள்விகள் அப்போதே எழுந்தன. இவை பாஸனால் எழுதப்பட்டவைதாம் என்பதை நிறுவ முயல்கிற ஒரு நீண்ட ஆய்வு இந்நூலின் முன்னுரையாகத் தரப்பட்டுள்ளது.
மீண்டும் பரிசல் பதிப்பகத்திலத்தினரால் கொண்டுவரப்பட்டுள்ள இந்நூல், தமிழ் நாடகவுலகிற்கு, தமிழ்ப் புனைவுலகிற்கு ஆக்கவளமிக்க பங்களிப்பை நல்கும் என்பதில் ஐயங்களேதுமில்லை.
-பிரளயன்
Be the first to rate this book.