பாரதி கண்ட உண்மை
பாரதி. உலகெங்கும் தொழிலாளி வர்க்கம் முன்னேறுவதைக் கண்டார். அவர்களுடைய நோக்கங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டார். இந்தியாவில் தொழிலாளி வர்க்க இயக்கம் ஆரம்பக் கட்டத்தில்தான் இருந்தது. ஐரோப்பாவில் அது முன்னேறிப் வெற்றிகளைப் பெற்று வந்தது சோஷலிசம் தனது நோக்கமெனப் பிரகடனம் செய்தது. நம்மை ஆண்டு வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடுநடுங்கிற்று. நமது நாட்டில் இக் கொள்கை தொழிலாளிகளிடம் பரவவிடாமல் பல தடைகளை விதித்தது. பத்திரிகைகள் ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கங்களைப் பற்றி எழுத விடாமல் எச்சரிக்கையாகக் கண்காணித்தது. தொழிலாளர் இயக்கச் செய்திகளோ, அவர்களது வர்க்கத் தத்துவமோ அச்சில் வராதபடி தடுக்க அச்சகச் சட்டங்களைப்
பயன்படுத்தியது.
இந்நிலையில் பாரதி இத்தடைச் சுவர்களை ஊடுருவித் தொழிலாளர் இயக்கத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொண்டார். ஐரோப்பிய முதலாளித்துவப் பத்திரிகைகள் கொடுத்த திரிப்புச் செய்திகளை ஊடுருவி உண்மையைக் கண்டார். அவ்வுண்மையைத் தாம் எழுதிய செய்திக் குறிப்புகளிலும், தலையங்கங்களிலும் வெளியிட அவர் தயங்கவில்லை.
Be the first to rate this book.