பேக்கரி தொழில் பற்றிய முழுமையான அறிமுகத்தையும் அதில் வெற்றி பெறுவதற்கான உத்தியையும் வழங்குகிறது இந்நூல். இதனை, ஸ்ரீ ஸ்ரீ சித்தார்த் எழுதியிருக்கிறார். பேக்கரி தொழிலுக்குத் தேவையான இடத்தை எப்படி தேர்வு செய்வது எனச் சொல்வதோடு, லாபம் தரக்கூடிய மெனுக்களை எப்படி உருவாக்குவது, பேக்கரி தொழிலுக்கான அனுபவத்தை எப்படி பெறுவது என அனைத்தை பற்றியும் இந்நூல் பேசுகிறது. மேலும், திட்டமிடல், பேக்கரியை நிர்வகித்தல், நுகர்வோரை ஈர்த்தல், வருமானத்தைப் பெருக்குதல் போன்ற பேக்கரி தொழிலில் வெற்றி பெறுவதற்கான 20 கட்டுரைகள் இந்நூலில் உண்டு. பேக்கரியை சட்டப்படி பதிவு செய்வது, பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, பேக்கரி ஃப்ரான்சைஸ் விரிவாக்கம் செய்வது என பல விஷயங்களை உள்ளடக்கியது இந்நூல். பேக்கரி தொழிலை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும், பேக்கரி தொழிலில் முன்னேற்றம் காண விரும்புபவர்களுக்குமான நூலிது.
- தினகரன்
----
சறுக்கி விழுந்தும் முறுக்கி எழுந்தால் வெற்றி நிச்சயம்:
வெற்றிப் பெறும் பேக்கரி தொழிலை உருவாக்கும் மற்றும் வளர்க்கும் வழிகாட்டி, உங்கள் பேக்கரி கனவை ஊக்குவிக்கவும் விரைவாக தொடங்கவும் அதிக வருமானம் ஈட்டவும் நம்பிக்கையுடன் தொழிலில் வளரவும்.பேக்கரி தொடங்க விரும்புகிறீர்களா?ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லையா?
இந்தப் புத்தகம் படிப்படியாக உங்கள் வெற்றிக்குத் தேவையான அனைத்தையும் அனுபவம் இல்லாமல் உய்த்தறிந்து சகலத்தையும் எப்படி புரிந்துகொள்வது என்பதை வழங்குகிறது.
சரியான இடத்தை எப்படி தேர்வு செய்வது?அதிக லாபம் தரும் மெனுக்களை எப்படி உருவாக்குவது?தினசரி செயல்பாடுகளை நிபுணராக நிர்வகிப்பது பற்றி கற்றுக் கொடுக்கிறது.இந்நூல் சட்டப்படி பதிவு செய்வது, பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, பேக்கரி ஃப்ரான்சைஸ் விரிவாக்கம் செய்வது இப்படி அனைத்தும் இதில் அடங்கியுள்ளது.
பேக்கரி தொழிலை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும், பேக்கரி தொழிலில் முன்னேற்றம் காண விரும்புபவர்களுக்குமான நூல் இது.
Be the first to rate this book.