8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே இஸ்லாம் உலகம் முழுவதும் பரவியது என்றாலும், அரபு நாடுகளின் தமிழக வணிகத் தொடர்புகள் சங்க காலத்தைச் சார்ந்தவையாகும்.
ஏகத்துவம், சமத்துசாதி மறுப்பு, ஓர் இறைக் கொள்ளக, இனப்பெருமை பேசாமை, மறுமை நம்பிக்கை போன்ற கூறுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய மார்க்கம் ஓர் இனிய மார்க்கமாக தமிழகம் ஏற்றுக்கொண்டது.
அரபு வணிகர்கள் பல்வேது காலகட்டங்களில் கப்பல் வணிகர்ளாக தமிழகம் வந்தனர். பெரிய எண்ணிக்கையில் குடும்பன் குடும்பமாக இங்கு வந்து குடியேற்றம் செய்யவில்லை. சிலர் இங்கே தங்கினர், பலர் திரும்பிச் சென்றனர். இஸ்லாம் மட்டுமே இங்கே முழுமையாக குடியேற்றம் கண்டது.
தமிழகத்தின் முஸ்லிம் வரலாற்றை ஆய்வு செய்யவேண்டி வந்தான் 1400 வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டே நாம் திரும்பி வரவேண்டும். வேரின் ஆழத்தைத் தொடாமல் மரத்தின் ஆயுளைக் கணக்கிட முடியாது.
Be the first to rate this book.