அழகு என்பது காணும் தோற்றத்தில் அல்ல. அது ஒருவரின் மனதைப் பொறுத்து அமையும். இந்த நாவலின் நாயகன் சமீர். அழகிய ஒரு பெண்ணைக் காதலித்து மணம் புரிகிறான். பணக்காரப் பெண்ணான அவளுக்கு. கணவனின் வருமானத்தில் வாழ்வதும். அதற்கு ஏற்ப செலவு செய்வதும் இயலாத காரியம் ஆகிறது. தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய கணவனைத் துபாய்க்கு அனுப்புகிறாள். அவன் அங்கிருந்து வருவதற்குள், தன்னுடைய வீட்டுக்கே அவள் சென்று விடுகிறாள். அவளை வந்து அழைக்கும் சமீரிடம். எனக்கு உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என்கிறாள். மனம் வெறுத்துப் போன சமீர். துபாயிலேயே காலத்தைக் கடத்துகிறான். அவனது அம்மா. அவனுக்கு நஸி என்ற பெண்ணோடு மறுமணம் புரிந்து வைக்கிறார். நஸிக்கும் இது இரண்டாவது திருமணம். தாலி கட்டிய உடனே மணமகன் இறந்து போகிறான். இப்படி விதவையான நஸியின் முகத்தைப் பார்க்காமலேயே மணம் புரிந்த சமீர். மறுநாளே துபாய்க்குச் சென்று விடுகிறான். இப்படியே நான்காண்டுகள் கழிகிறது. இவர்கள் தங்கள் வாழ்வில் இணைவார்களா? இல்லையா? என்பதை நாவலைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
Be the first to rate this book.