ஒப்பேரில்லாத தமிழ்த்தேசியப் போராளிகளான பேராசிரியர் இலக்குவனாரும், பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் பெரியார் காட்டுமிராண்டி மொழி எனச் சாடியது ஆரியக் கலப்பின் தீமையை உணர்த்தவும் தமிழை வடமொழியிலிருந்து விடுவிக்கவும்தான் எனக் கூறினர். பெரியாரின் நோக்கத்தைச் சிதைக்கவே எதிரிகள் திசைதிருப்புகின்றனர் என்று மேலும் அவர்கள் விலக்கினர். இன்று சிலர் ஒருபடி மேலே போய் அவர் பிறப்பால் தமிழரில்லை என அரத்தப் பரிசோதனைச் செய்யத் தொடங்கியுள்ளனர். அன்று பெரியார் அப்படிச் சொன்ன காலத்தில் பெரியாரைச் சுற்றியிருந்தவர்கள் ஆதரித்து நின்றவர்கள் மறைமலையடிகளார் தொடங்கித் தேவநேயப் பாவாணர் வரையிலான தமிழறிஞர்கள் என்பதை இவர்கள் உணர வேண்டும். தமிழைக் காத்துநின்ற அவர்களைவிடவா பெரியாரைத் தமிழ்ப் பகைவர் எனப் பழிபோடும் இவர்கள் தமிழ்த் தொண்டாற்றி விட்டார்கள்? இவர்களின் இழிபேச்சு இன்று இந்துத்துவா வடிவத்தில் மீட்சி பெற்றுவரும் பார்ப்பனியத்திற்கே துணைபுரியும்.
Be the first to rate this book.