நிலவை உருக்கிச் சொற்களாக்கியபடி தனிநடை போகும் ஒரு கர்வமும் மிடுக்கும் துணிவும் ஆற்றலும் வெடித்து முடிவுக்கு வரும் கவிதைகள் ஸான்யோவின் கவிதைகள். தமிழ் நிலம் தாண்டி மொழியால் நிலம் விரித்து இயங்கும் இப்படியான கவிகளால் மொழி புத்தெழுச்சி கொள்கிறது. இம்மாதிரியான கவிதைகளை, அதாவது எதிர்ப்பாலினம் மீதான காதலின் கவிதைகளை, ஒருபொழுதும் அசலாகவோ முழுதாகவோ படைக்க முடிந்ததில்லை என்பதைச் சவாலாக்குகிறேன்.
காதலின் பேரானந்தக் களிப்பைத் தான் மட்டுமே அனுபவிக்க நேர்ந்ததுபோல, கவிதையின் மந்திரக் கம்பளத்தைக் கம்பீரமாக நம் முன் விரித்தது போன்று இந்தத் தொகுப்பு. ஒவ்வொரு கவிதையின் வழியாகவும் காதலின் பல பரிமாணத்தை நுகரலாம், உணராத காதலையும் அறியாத காதலையும்!
-குட்டி ரேவதி
Be the first to rate this book.