சமகால உலகியல் உருவாக்கி வைத்திருக்கும் மன அவசங்களிடம் இருந்து விடுதலை வேண்டியே கவிதையிடம் வருகிறார்கள். சின்னதாக கை குலுக்கி ஒரு ஹலோ சொல்லும் எளிய கவிதைகளைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். அத்தகைய கவிதைகள் நிரம்பிய ஒரு தொகுப்பாக இத்தொகுப்பு விளங்குகிறது. ஒரு கவிதை தொகுப்பு குறைந்த பட்சம் ஒரு அன்பின் தீற்றலை மனதில் ஏற்படுத்தினாலே போதும். அதனை வெற்றி பெற்ற தொகுப்பாக கொள்ளலாம். இத்தொகுப்போ அன்பின் அணையாச்சுடரை இதயத்தில் ஏற்றி வைக்கிறது.
'எதிலும் அதீதம் விநாச காலம்' என்று சொல்கிறார். ஆனால் இவரது கவிதைகளுக்கு மட்டும் அது விதி விலக்கு. எவ்வளவு அதீதமாக ருசித்தாலும் இவரது கவிதைகள் அலுப்பு தட்டுவதில்லை.
- கார்த்திக் திலகன்
Be the first to rate this book.