தமது சொந்தவாழ்வின் வலியிலிருந்து தொடங்கி, இலக்கு அவசியமா? அறிவு என்ற ஒன்று இருக்கிறதா? கற்பித்தலின் கோளாறு என்ன? இட ஒதுக்கீடு தேவையா? என்று நீட்டித்து, வினைப்பயன், மறுஜென்மம், இருத்தலியம் என விவாதித்து. எது சமூக மாற்றம்? மக்கள் இலக்கியத்தின் தேவை என்ன? என்று கட்டுரைகள் மூலம் நம்முடன் உரையாற்றுகிறார். கட்டுரையாளர் நடராஜன் பெருமாள்..
'அதனால்தான் சொல்கிறேன்' - இது தரவுகளை. மேற்கோள்களை, உதாரணங்களைக் கொண்டு கட்டப்பட்ட உரை அல்ல. அதிக விஸ்தாரமான வாசிப்புக் கொண்ட, உளவியல் தெரிந்த. சமூக அக்கறையோடு கூடிய, தம் சொந்தக் கருத்தோடு தர்க்கம் செய்யும் கட்டுரைகள்.
இதுவரை நீங்களும் நானும் வைத்திருந்த கருத்துகள் மீது மறு விசாரணை கோரும் அல்லது ஆக்கப்பூர்வமான தர்க்கத்திற்கு அழைக்கும் எழுத்து என்பதால், இந்த நூல் இலக்கிய வெளியில் தன் இருப்பை நிறுவும் என்று என்னால உறுதியாகச் சொல்லமுடியும்.
-அமிர்தம் சூர்யா
Be the first to rate this book.