அஸ்வகோஷர் இயற்றிய புத்த சரித்திரம், சம்ஸ்கிருத மொழியில் மகா காவியமாகப் புகழ்பெற்றது. அஸ்வகோஷர் சம்ஸ்கிருத அறிஞர். மகாகவி. இவர் சம்ஸ்கிருத இலக்கியத்தின் முதல் நாடக ஆசிரியராக அறியப்படுகிறார்.
அஸ்வகோஷர் அந்தணரானாலும் பிராமண வர்ணாசிரமத்தைத் துறந்து பௌத்தராக மாறி புத்தரின் போதனைகளைத் தன் இலக்கியப் பங்களிப்பின் மூலம் விரிவாகப் பிரசாரம் செய்தார்.
புத்தரின் வாழ்க்கை வரலாற்றை இருபத்தெட்டு அத்தியாயங்களில் முழுமையாக விவரிக்கிறது இந்த நூல்.
இந்தக் காவியத்தின் முதல் பகுதியில், புத்தரின் வீடு துறத்தல், தவம், காமதேவனின் தூண்டல்கள், மன்மதனை வென்றது போன்ற சம்பவங்கள் உணர்ச்சிபூர்வமாக அழகான காவிய நடையில் விளக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பகுதியில் புத்தரின் காசி வருகை, சீடர்களுக்குப் போதனை. பெரிய சீடர்களுக்குத் தீட்சை, தந்தையும் மகனும் சந்திப்பு, 'ஜேத்' வளத்தை ஏற்பது. ஆம்ரபாலியின் தோட்டத்தில் ஆயுள் நிர்ணயம், லிச்சவிகள் மீது கருணை, நிர்வாண மார்க்கம், மகா பரிநிர்வாணம், நிர்வாணத்தைப் போற்றும் துதிகள் புத்தரின் உடல் எச்சங்களைப் பகிர்தல் ஆகியவை உள்ளன. இதில், புத்தரின் கொள்கை பற்றிய கூடுதல் விவரம் காணப்படுகிறது.
தமிழில் முதன்முறையாக அஸ்வகோஷரின் புத்த சரிதத்தை முழுமையாக விரிவாக எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன்,
Be the first to rate this book.