சிறுகதைகளைப் புதுப் பாணியில் எழுதி சாதனை படைத்த இராசேந்திர சோழன், டில்லி தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சியைப் பெற்றவர், நாடகப் பிரதிகளை உருவாக்கியவர். தெனாலிராமன், மரியாதைராமன் வரிசைக் கதைகளில் கூட, தன் பிரத்தியேகப் பார்வையைப் பொருத்தி மறு உருவாக்கம் செய்தவர்.
- திரைக்கலைஞர் கமல்ஹாசன்
முற்போக்கு மற்றும் நவீனத் தளங்களில் பறிமுதல், எட்டுக் கதைகள் போன்ற கலையழகு, வடிவ நேர்த்தி கொண்டவை விலங்கு, ராத்திரி நாடகங்கள். மக்களின் தேவை, உடனடிப் பிரச்சினை இவற்றை மையப்படுத்திய சமூக நோக்குடையவை வீதி நாடகங்கள். கர்ணப் பரம்பரை கதைகளிலுள்ள மதிநுட்பம், சமயோசிதச் சிந்தனை, உளவியல் கருத்துடைய சிறுவர்களுக்கான தெனாலிராமன் மற்றும் மரியாதைராமன் நாடகங்கள் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்டு விளக்கக்கூடிய முழுத் தொகுப்பு அஸ்வகோஷ் நாடகங்கள்.
நாடகம் வாசிப்பதற்கான இன்பத்துடன் நடிப்பதற்கான பிரதி, அவ்வகையில் நாடக உருவாக்க முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக நவீன நாடகத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்குத் துணைபுரிவதாக அஸ்வகோஷின் இந்த நாடகத் தொகுப்புகள் அமையும்.
- தொகுப்பாசிரியர் ஆ. ஜீவா
Be the first to rate this book.