விலங்குகளைக் காட்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் கீழாக நடத்தப்பட்டார்கள் என்பதுதானே சமூக வரலாறு. ஒரு தலித் செருப்பு அணியக்கூடாது, கைக்கடிகாரம் அணியக்கூடாது, பிராமணர்களின் அல்லது ஜமீன்தார்களின் முன்னால் பேசக்கூடாது, சுயமரியாதையுடன் வாழக்கூடாது. எதிர்ப்பைத் தெரிவித்தால் குடிசைகள் எரிக்கப்படும். ஆதிக்கவாதிகளின் போலியான சமூக விழுமியங்களை இவ்வளவு வெளிப்படையாகத் தோலுரித்த நாவல் அண்மைக் காலத்தில் எழுதப்படவில்லை. தேச விடுதலையைக் காட்டிலும், சமூக விடுதலையைத் தாழ்த்தப்பட்டவர்களும் சமூக உணர்வாளர்களும் அவாவியதற்கான நியாயமான காரணங்கள் இந்நாவலில் முன்னிறுத்தப்பட்டுள்ளது போல் வேறு எந்த நாவலிலும் முன்னிறுத்தப்பட்டதில்லை என்று தோன்றுகிறது. பார்ப்பனர்களின் போலித்தனமான விழுமியங்களையும், இந்த நாவலைப் போல் அண்மைக்காலத்தில் வேறு எந்த நாவலும் சாடியதில்லை.
Be the first to rate this book.