இரா. பாலகிருஷ்ணன்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையத் தலைவரான, சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் பண்டைய தமிழ்நாட்டிற்கும் இடையிலான தொடர்பு குறித்து இவர் எழுதிய Joumey of a Civilization: Indus to Vaiga (2019) என்கிற நூல் சிந்துவெளி ஆய்வுலகில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. அதன் தமிழ்ப் பதிப்பான ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை" 2023)நூல் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்துடன் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' (2016), 'கடவுள் ஆயினும் ஆன (2022), ஃஅணி நடை எருமை (2022), 'ஓர் ஏர் உழவன்" (2022) உள்ளிட்ட ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். தனது வாழ்கை அனுபவங்களை இரண்டாம் சுற்று (2018). 'குன்றென நிமிர்ந்து நில்' (2018), 'தமிழ் நெடுஞ்சாலை" (2022) ஆகிய நூல்களின் வழியே பகிர்ந்துள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தின் பன்மியத்தை ஆழமாக வலியுறுத்தும் இவர், 'இந்தியா ஒரு மழைக்காடு' என்ற கருத்தாக்கத்தைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். இதனை ஒரு பண்பாட்டு அரசியல் செயல்பாடாகச் செய்து வருகிறார். தற்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
Be the first to rate this book.