நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் கணிசமான அளவு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதன் பயனாய் விளையும் மதிப்புமிக்க வெளியீடு பல சந்தர்ப்பங்களில் கல்வி ஆர்வத்தையும் மீறி தொழில்துறை மற்றும் சமூக முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. எனவே அறிவுசார் சொத்துரிமைகளாக உருவாக்கப்பட்ட அறிவின் புதிய அம்சங்களைப் பாதுகாப்பது மிக அவசியமாகிறது. பொதுவாகவே அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளன.
இதை கருத்தில் கொண்டே இந்த புத்தகத்தை எழுத எண்ணினேன். அதற்கேற்றவாறு என்னால் இயன்ற அளவிற்கு எளிமையாக புரியும்படி நான்கு பாகங்களாக பிரித்துள்ளேன்.
முதல் பாகத்தில் நமது சிந்தனை எப்படி செயல்படுகின்றது என்றும் படைப்பாற்றல் என்ற தனித்திறமை அல்லது புதுமையான சிந்தனை என்றால் என்ன என்றும் படைப்பாற்றல் திறமையை எப்படி வளர்த்துக்கொள்ளலாம், யார் வேண்டுமானாலும் கண்டுபிடிப்பாளர்/ படைப்பாளி ஆகலாம் என்றும் விவரித்துள்ளேன்.
Be the first to rate this book.