அறிவியலில் பல்வேறு அதிசயங்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் இந்த நூலில் பல்வேறு பறவை இனங்கள். பூச்சிகள். பல வகை மீன்கள். விலங்குகள். தாவரங்கள். உலோகங்கள் முதலானவை குறித்து, பலரும் அறிந்திடாத பல்வேறு சுவையான செய்திகள் 25 சிறுசிறு கட்டுரைகளாக அமைந்து நம்மை வியப்புக்கு உள்ளாக்குகின்றன.
வண்ணத்துப்பூச்சியின் உடலில் பவுடர் போன்று காணப்படுகிறதே. அது என்ன? கண்ணாடிப் பட்டாம்பூச்சியா. அது எப்படி இருக்கும்? மின்மினிப் பூச்சிகள் இரவில் ஒளி வீசுவது எதனால்? கடலில் ஒளிவீசும் மீன் கூட இருக்கிறதா. அது என்ன மீன்? கடல் குரங்கு என்கிறார்களே. குரங்கு கடலிலும் வசிக்குமா? பெட்டி மீனின் செயல்பாட்டை வைத்து காரை (Car) உருவாக்குகிறார்களா? அந்த மீன் எப்படிச் செயல்படும்? வயது ஆனதும் மீண்டும் இளம்வயதுக்கு மாறிவிடும் மரணமில்லாதா மீனா. அது என்ன மீன்? மந்திரவாதிகள் மீனின் ரம்பத்தை மந்திரக்கோளாகப் பயன்படுத்துகிறார்களா? அப்படிப்பட்ட ரம்ப மீன் எப்படி இருக்கும்? அந்தரத்தில் சறுக்கி விளையாடும் அணிலா. அது என்ன அணில்? புறாக்கள் எப்படித் தூது சென்று, மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பி வருகின்றன? கற்களைச் சாப்பிடும் பறவையா. அது ஏன் கற்களைச் சாப்பிடுகிறது? எவ்வளவுதான் சூடுபடுத்தினாலும் சூடாகாத உலோகமா. அது என்ன உலோகம்? தண்ணீரில் கூட தீப்பற்றிக் கொள்ளும் உலோகமா. அதன் பெயர் என்ன? இரும்பையே வலிமையாக்கும் உலோகமா. அது என்ன உலோகம்? பாலைவனம் பூ பூக்குமா? நீல நிறத்தில் ஒளிரும் எரிமலையா? இப்படிப் பல்வேறு அதிசயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன.
Be the first to rate this book.