ஊதிய விகிதம் குறைவாகவும், உழைப்பு நேரம் மிகுதியாகவும் முதலாளி வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்தைச் சக்கைகளாய்ப் பிழிந்தெடுத்த காலகட்டத்தில் தங்களது உள்ளக் குமுறல்களைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள் மூலம் வெளிக்காட்டினர். தங்கள் மீது நிகழ்த்திய உழைப்புச் சுரண்டலை நிறுத்த ஒன்று கூடினர். தொழிற்சங்கங்களைக் கட்டினர். உள்ளூர் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்புகளாயின. மாநாடுகள் நிகழ்ந்தன. உலக நாடுகளுக்கிடையே போராட்டங்கள் பரவின. தொழிலாளர் சங்கங்களின் திரட்சியால் பல கட்ட போராட்டங்கள் நடந்தன.
முதலாளித்துவமும், அரசும் கைக்கோர்த்து அனைத்துப் போராட்டங்களையும் ஒடுக்கினர். தொழிலாளர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில், அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பின் கடும் முயற்சியின் விளைவாக, பல நாடுகளின் தொழிற்சங்கங்கள் இணைந்த எழுச்சியின் பயனாக 1889-ஆம் ஆண்டு பாரீசில் நடந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் மே நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.
Be the first to rate this book.