வெளிநாட்டு வாழ்க்கையின் மறு பக்கம் எத்தகையது என்பதை நான் வளைகுடா நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்த தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்லாமல் இங்கு பணிக்கு வரும் இளம் வயதினரின் சிரமங்களை பதிவாக்க நினைத்த முதல் முயற்சி முதல் நாவல் வடிவம் இது, மனதில் இருப்பதை சொல்ல நினைத்ததை கவித்துவமோ அலங்கார வார்த்தைகளோ இல்லாமல் சாமானிய மனிதனாக சக மனிதர்களின் குரலாக தான் எழுத முடிந்தது. தகப்பன் சாமியை படிக்கும் ஒவ்வொருவரும் எதோ ஒரு இடத்தில் தன்னை பொருத்தி பார்த்துக் கொள்வார்கள் என்றும் நம்புகிறேன். நிறை குறைகளை பொருத்தருள்க.
-குடந்தை அனிதா
பெண்ணின் பிரச்சனைகளை மட்டும் பெண்களால் எழுத முடியும் என்பதை அனிதா உடைத்துள்ளார். செந்தில் என்ற ஆண்மகனின் ஆழ்மனத்தை எப்படி இவர் உணர்ந்து எழுதினார் என்பது ஆச்சர்யம். செந்தில் மட்டும்மல்ல அனிதா வார்த்தையில் சொல்வதென்றால் உடன் பயணித்த எல்லா ஆண்களையும் தகப்பன்சாமியாக படைத்தது பாராட்டுக்குறியது. அனிதாவின் இந்த நாவல் பேசப்படும் நாவலாக அமையும் என்பதில் ஐய்யமில்லை.
-வேதம் புதிது கண்ணன்.
(திரைப்பட/மேடை நாடகம்/தொலைக்காட்சி எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர்)
Be the first to rate this book.