புதிய மற்றும் வளரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு. சுவடு பதிப்பகம் மற்றும் நுழைபுலம் அமைப்பு சார்பில் 2021 மார்ச் மாதத்தில், மகளிர் தினத்தையொட்டி சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளுடன் சேர்த்து சிறந்த கதைகளாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதை களைத் தொகுத்து 'அப்பத்தா எனும் தலைவி' என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இந்தக் கதைகளை எழுதியவர்களில் சிலரது படைப்புகள், ஏற்கனவே பல்வேறு இதழ்களிலும் நூலாகவும் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த எழுத்தாளர்களில் பலரது படைப்பு அச்சில் வெளியாவது இதுவே முதன்முறை. படைப்புலகில் பயணத்தைத் தொடங்கியுள்ளவர்களுக்கும் எழுத்துப் பயணத்தின் நடுவே இந்தப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்களுக்கும் அன்புமிக்க வாழ்த்துகள்.
Be the first to rate this book.