இருபதாம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளில் கன்னட சிறுகதைகளின் படைப்பும் பிரசுரமும் தொடங்கின. பல நாளிதழ்கள், வார இதழ்கள், சிறு பத்திரிகைகள் போன்றவை இலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்தது மட்டுமல்லாமல் வாசக வட்டத்தில் சிறுகதைகளுக்கு ஏற்பட்ட விருப்பமும், எதிர்வினையும் அந்த வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கச் செய்தன.
நவீன கன்னடத்தின் முக்கியமான இலக்கியப் பாதையில் முற்போக்கு இலக்கிய இயக்கம் உரைநடை இலக்கியத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்தது. முற்போக்கு எழுத்தாளர்கள் புதினத்தையும், சிறுகதையையும் தங்கள் வெளிப்பாட்டின் கருவியாக ஆக்கிக்கொண்டார்கள். வெறுமனே பொருள் பார்வையில் மட்டுமல்லாமல், சொல்லிலும், தந்திரத்திலும், மொழியிலும் சிறப்பான மாற்றங்கள் வந்தன. மனித மனத்தின் அகமோதல். அதைக் கலைநயத்துடன் வெளிப்படுத்துவதில் நவீன கதை சொல்லிகள் சிறப்பான தேர்ச்சியை அடைந்தார்கள்.
பிறகு வந்த தலித் எழுத்தாளர்கள் வாழ்க்கை சார்பு, மக்கள் சார்பு உணர்வுகளுக்கு மாறினாலும் சிறுகதை வடிவத்தை மற்றொரு நிலைக்கு எடுத்துச் செல்வதில் வெற்றி கண்டார்கள். நவீனத்திற்குப் பின்வந்த எழுத்தாளர்கள் இன்னும் ஓரடி முன்சென்று சிறுகதைகளின் சாத்தியக்கூறுகளின் எல்லையை விரிவாக்கினார்கள். தற்போது எழுதும் எழுத்தாளர்களும் கூட அந்தப் பரம்பரையைத் தொடர்வதுடன் கூடவே தங்களுக்கே உரிய தனித்துவத்தையும் வெளிக்கொணர்கிறார்கள். 'அப்பா சாகேப்' தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகள் அதுபோன்ற தனித்துவமான சிறப்பு கொண்ட கதைகள்.
Be the first to rate this book.