இரண்டு குறுநாவல்கள். இரண்டு வேறுபட்ட தளங்கள்.
கணவன் என்று அறியப்பட்ட ஒருவரின் மரணத்திற்குப் பின்பு, அவரைக் கணவராக நினைத்து, விதவையாக வாழும் சாம்பவியின் முன், அதே பெயருடன், அதே உருவத்துடன் நிற்கும் ஒருவரை விரும்புவதா, வேண்டாமா என்ற மனப்போராட்டத்தில் வாழும் பெண்ணின் கதைதான், ‘கலைந்த கனவு.’
பிராமணர் வீட்டுப் பிள்ளைக்கும், அதே வீட்டில் தத்துப் பிள்ளையாக வாழும் மற்ற ஜாதிப் பிள்ளைக்கும், தந்தைக்கும், தந்தைக்குமான உறவுகளும் சிக்கல்களும் பேசும் நாவல் இது. மற்ற ஜாதிப் பையன் என ஒதுக்கப்பட்டு வீட்டைவிட்டு ஓடிய லக்ஷ்மணனைத் தேடி, அண்ணன் இராமன் செல்வதும், அதனால் ஏற்படும் மரணங்களையும் குறித்த கதைதான் ‘நான் குற்றவாளியே!’ கதைகள் வெகுஜனத்தை, திரைத்தன்மை கொண்டவை. ஆனால் கதைகள் அதிகம் விவாதிப்பவை மனப்போராட்டத்தைத்தான்.
Be the first to rate this book.