நவீன ஜெர்மன் சிறுகதைகள்
மின்னாமல் முழங்காமல் பெய்த மழையைப் போல், மேற்குலகின் ஆங்கில இலக்கியத்தை அடுத்துப் பிரசித்தம் பெற்ற ஜெர்மானிய இலக்கியத்தின் பல சிறப்பான படைப்புகள் தமிழில் வெளி வந்திருக்கின்றன. படைப்பு இலக்கியத்தைப் பொறுத்தவரை கதே, இப்சன், காஃப்கா, ஹெர்மன் ஹெஸ்ஸே, தாமஸ் மன், ஹென்ரிச் பால், ரில்கே. பால் செலான், பிரெக்ட், எரிக்மரியா ரிமார்க், ஸீக்பிரீட் லென்ஸ் போன்ற படைப்பாளிகள் தமிழில் பரவலாக அறிமுகம் பெற்றுள்ளார்கள்.
தென்மொழி புத்தக டிரஸ்ட் சார்பில் பலவும், ஜோதிநிலையம், சாகித்ய அகாதமி, க்ரியா போன்ற பதிப்பகங்கள் சார்பில் சிலவுமாக இவை வெளி வந்திருக்கின்றன. இவைகளில் கா. திரவியம், ஐ.ஏ.எஸ். என்பவரைத் தொகுப்பாளராவும் மொழிபெயர்ப்பாளராகவும் கொண்டு வெளிவந்த ஜெர்மானிய இலக்கியத்தின் சிறப்புப் பகுதிகள், ஜெர்மானியப் புத்திலக்கியம் என்ற தலைப்பில் கதை, கவிதை, கட்டுரைகள் அடங்கியவையாக வெளி வந்த இரு புத்தகத் தொகுதிகளும் முக்கியமானவை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பும் இன்றைய கிழக்கு-மேற்கு ஜெர்மன் ஒருங்கிணைப்புக்கு முன்பும் உள்ள 1970-1980களின் கால கட்டத்தின் படைப்புகளைக் கொண்ட 'ஜெர்மானியப் புத்திலக்கியம்' என்ற தொகுப்பில் வந்த சிறுகதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, 'அன்டிகளியும் நந்தவனத்துச் சித்திரக்குள்ளனும்' என்ற இந்நூல் மறுபதிப்புச் செய்யப்பெற்றுள்ளது.
ஸீக்ஃப்ரீட் லென்ட்ஸ், மார்ட்டின் வால்ஸர், எலிசபெத் பார்ஷெர்ஸ், ஹெர்மன் கெஸ்டென், பவுல் ஷல்யூக் பவுல் பாட்னர், நினோ எர்னே, ஹன்ஸ் வெர்னர் ரிஷ்ட்டர், ஹன்ஸ் எரிக் நாசாக், எர்ன்ஸ்ட் க்ராய்டர், கார்ல் அவ்குஸ்ட் ஹார்ஸ்ட், க்யுன்டர் ப்ரூனோ ஃபுக்ஸ், வோல்ஃப்காங் வேய்ரெளஹ், தியோடோர் வைஸன்பார்ன், எச். ப்அல், இல்ஸ ஐஹ்ஹிங்கர், ஹன்ஸ் பென்டர், கொட் கைஸர், வால்ஃப்பட்ரீஷ் ஷ்னுரர் ஆகிய நவீனத்துவ எழுத்தாளர்களின் உத்திச் சிறப்பு மிக்க சிறுகதைகள் தொகுக்கப் பெற்றுள்ளன.
Be the first to rate this book.