கருதுகோள்கள், வாழிடங்கள், ஆளுமைகள், காட்டுயிர் போன்ற பலதரப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் இருந்தாலும் அவற்றின் ஊடே இழையோடுவது நூலசிரியரின் சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறைகள். பல ஆண்டுகளாக எழுதி வளப்படுத்திக்கொண்ட தனது மொழியாற்றலால் அறிவியல் கருதுகோள்களையும் நமது இருப்பு பற்றிய அவதானிப்புகளையும் ஆசை எளிய மொழியில் விளக்குகிறார். ஒரு சமூகத்தில் புதிய புதிய கரிசனங்கள் உருவாகும்போது அக்கரிசனங்கள் வளர வேண்டுமென்றால் அவற்றைப் பற்றிய ஒரு சொல்லாடல் உருவாக வேண்டும். இதற்கு மொழி வளமூட்டப்பட வேண்டும். மொழியின் விரிவாற்றலை பயன்படுத்திப்புதிய அக்கறைகளை வளர்க்க வேண்டும். அத்தகைய பணியை இந்த நூல் செய்கின்றது.
- க.தியடோர் பாஸ்கரன், முன்னோடிச் சூழலியர்
Be the first to rate this book.