எனது நாற்பது ஆண்டு வியப்பை...
நாற்பது ஆண்டுகள் இருக்கும் 'ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல" என்று தன் கவிதை நூலுக்கு தலைப்பு வைத்தார் ஷேசாசலம். அதிர்ந்து போனேன். ஒரு புத்தகத்திற்கு ஒரு கவிதையே தலைப்பாக முடியுமா? அதன்பிற்கு எத்தனையோ கவிதைகள் புத்தகங்களின் தலைப்புகளாகி இருக்கின்றன. சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் ஷேசாசலத்தின் தலைப்பை எதுவும் நெருங்கவில்லை என்னைப் பொறுத்தவரை "என்னைப் பொறுத்தவரை" என்பதை அடிக்கோடு போட்டு வாசிக்க வேண்டுகிறேன்.
எனது நாற்பது ஆண்டு வியப்பை"அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது"என்ற இன்னொரு வியப்பின் மூலம் அசைத்துப் பார்த்திருக்கிறார் இளமதி, எனது இந்த வியப்பை இன்னும் கெட்டிப்படுத்தி இருக்கிறது தோழர் லார்க் பாஸ்கரனின் அட்டை. என்னைப் பொறுத்தவரை வார்க்கின் சிறந்த அட்டைப் படம் இதுதான். இங்கும் "என்னைப் பொறுத்தவரை" அடிக்கோடிடப்பட வேண்டும் இதைவிட அழகியலோடு கூடிய ஆழமான தலைப்பை யாரேனும் தரக்கூடும். இதைவிடச் சிறந்த அட்டைப்படத்தை யாரேனும் தரவும் கூடும். நாற்பது ஆண்டுகள் ஆகலாம் அல்லது மதியின் அடுத்த நூலேகூட அதைச் செய்யலாம் லார்க்கின் அதற்கான அட்டைப்படமும் இந்த அட்டைக்கான எனது வியப்பை உடைக்கலாம். இந்த ரைட்-அப் மதி, லார்க் இருவருக்குமானது.
ஆமேன்
-இரா.எட்வின்
Be the first to rate this book.