இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்தவரின் சிலைகளை அடைக்க இந்தியாவிலேயே இன்றைக்கு கூண்டுகள் தயாரிக்கப்படும் கொடுமை நிலவுகிறது...!
இந்து சட்ட தொகுப்பு மசோதாவை சாதிய சனாதனிகள் ஏற்காததால் தனது சட்ட அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தவர் அம்பேத்கர்.
"நான் ஒரு இந்துவாக பிறந்திருக்கலாம் ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன்" என்று அம்பேத்கர் ஒரு நிகழ்வில் உறுதியேற்றார். அதன்படி அவர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஒரு புத்த மதத்தைச் சார்ந்தவராகவே காலமானார்...!
அம்பேத்கரின் அந்த நிலைப்பாடு சமத்துவத்தை முற்றிலும் மறுக்கும் சனாதனக் கோட்பாட்டிற்கு எதிரான ஒரு மாபெரும் ஜனநாயக அறப்போராகவே இன்று வரை கருதப்படுகிறது...
யாருக்கு சாதியில் நன்மை விளையுமோ அவர்கள் தான் சாதியை காப்பாற்ற விரும்புவார்கள். ஆனால் அம்பேத்கரோ தன் வாழ்நாள் முழுவதும் சாதியின் காரணமாக அவமானங்களை சந்தித்தவர். அவர் எப்படி சாதியத்தலைவராக இருக்க முடியும்..?
அரசமைப்பை விட அரசமைப்பு நெறிமுறையை (Constitutional Morality) கடைப் பிடித்து அதன்படி நடப்பது அதைவிட மிகவும் முக்கியமானது என்கிறார் அம்பேத்கர். கற்பி. ஒன்று சேர். போராடு என்று கர்ஜித்தவர் அம்பேத்கர்.
தீண்டாமைக்கு எதிரான போர்க்குணம். அயல்நாடு சென்று கடுமையாக உழைத்துப் பெற்ற பட்டங்கள். வியக்க வைக்கும் மேதமை. உலக வட்ட மேசை மாநாடுகளில் சிறப்புமிக்க பங்களிப்பு. உலகின் நெடிய அரசமைப்பை தலைமை ஏற்று உருவாக்குவதில் சீரிய பணி. பௌத்த மறுமலர்ச்சிக்கு நல்கிய வரலாற்று பங்களிப்பு என பல்வேறு காரணங்களுக்காக அண்ணல் அம்பேத்கர் போற்றப்படுகிறார்...!
Be the first to rate this book.