"அண்ணா அவர்களோடு பழகியோரின் நினைவுகள் 'மணக்கும் நினைவுகள்' என ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் இணைத்துத் தரப்பட்டுள்ளன. அரிய செய்திகள் உள்ள அக்கட்டுரைகள் பெருமுயற்சியால் திரட்டப்பட்டவை; படிப்போரை சிலிர்க்கச் செய்யக் கூடியவவை"
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.