சாமானிய பிறப்புக்கும், சாதனை மரணத்திற்கும் இடைப்பட்ட அண்ணாவின் வாழ்க்கை தமிழக வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு காலத்தின் தீர்ப்பாகும்...
நீதிக்கட்சியிலும் திராவிடர் கழகத்திலும் பெரியாரின் தளபதியாக இருந்தவர் அண்ணர்..
இன்றுவரை இதிகாச காவியத்தின் ஆபாச பகுதிகளை கம்பரசம் என்று அம்பலப்படுத்தி இலக்கியவாதிகளின் விமர்சனமாக இருந்துவருபவர் அறிஞர் அண்ணா.
அதேசமயம் "நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் அதற்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என்ற மதச்சார்பற்ற, வெகுஜன அரசியலுக்கு ஏற்ற, நிலைப்பாட்டையும் எடுக்கத் தயங்காத நிலையில் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று ஒரு புதிய சித்தாந்தத்தின் திருப்புமுனைக்கும் ஈம்மதமாக மாறியவர் அண்ணா.
அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடு ஆகிவிட்டது.
உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் தமிழ்நாடு என்ற பெயரை சூட்டியவர் அண்ணா துரை.
அண்ணா திரைத்துறையில் நுழைந்த போது அது திராவிட இயக்கத்திற்கும் திரைத்துறைக்குமே முக்கிய த்திருப்பு முனையாக, பண்பாட்டு மாற்றமாக உருவாகியது.
நவீன தமிழின் மீதும், மக்கள் புழங்கும் நமிழின் மீதும், அண்ணா செலுத்தி இருக்கும் தாக்கம் அளப்பரியது..! அண்ணா அண்ணா தான்...!
Be the first to rate this book.