நகரம் உறங்கும் நள்ளிரவிலும், சூரியன் இன்னும் விழித்திராத அதிகாலையிலும் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருக்கும் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் பற்றி பொள்ளாச்சி கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரின் இந்தக் கவிதைகள் கற்பனை நயத்துடன் பேசுகின்றன. தமிழ்நாட்டின் தெருக்களில், மஞ்சள் அல்லது பச்சை சீருடையுடன் கையில் துடைப்பம் ஏந்தி ஒவ்வொரு குப்பைக் குவியலையும் தூய்மைப் பணியாளர்கள் தூக்கி எறிகிற போது தூய்மையான ஒரு நகரத்தின் காலையை அவர்கள் ஒரு ஓவியமாகத் தீட் டுகிறார்கள். நாம் காலை காபியுடன் ஜன்னல் ஓரத்தில் நின்று நகரத்தை ரசிக்கிற போது அதன் பின்னால் உழைக்கும் கைகளின் வியர்வையும் அடக்கப்பட்ட இருமலும் இருக்கின்றன என்பதைக் கவிஞரின் வரிகள் நமக்குச் சொல்கின்றன.
-இந்திரன்
Be the first to rate this book.