தோழர் தேனி சீருடையானின் 15 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பு, எழுதி எழுதிப்பழகிய கையின் லாவகம் மொழியில் மிளிர்கிறது.வெகு சரளமாகக் கதைகள் நகர்கின்றன. அவரை அடையாளப்படுத்தியுள்ள அவரது முந்தைய படைப்புகளின் நீட்சியாகவும் அடுத்த கட்டமாகவும் நம் கை வந்து சேர்ந்துள்ளது. எப்போதும் தன்னை முன்னிறுத்தாமல் அமைப்பை முன்னிறுத்தும் இயக்கவாதி அவர். அவருடைய வாழ்வையும் படைப்புகளையும் சமமாக மதிக்கிறவன் நான். அவரைப்பின் தொடர்பவன். அவருடைய நிறங்களின் உலகம் நாவல் உலகப்புகழ் பெற்ற படைப்பு. பத்தாண்டுகளுக்கு மேலாகக் கண்பாற்வை அற்றவராக வாழ்ந்த தன் வாழ்க்கை அனுபவத்தின் பிழிசாறாக அந்நாவல் தமிழ்வாசகர்களை ஆட்கொண்டது. அந்நாவலின் தொடர்ச்சி என்று சொல்லத்தக்க கதைகளை இத்தொகுப்பில் பார்க்கிறோம். வேறு எந்த எழுத்தாளனாலும் எழுத முடியாத அனுபவங்கள்.
Be the first to rate this book.