மாப்பிளாக் கிளர்ச்சி பற்றிய படைப்புகள் தமிழில் மிகக் குறைவு. அதிலும், இலக்கியப் பதிவுகள் அநேகமாக ஒன்றுமில்லை. அந்த இடைவெளியை இந்நாவல் பெருமளவு நிரப்பும். மாப்பிளாக் கலகம் உக்கிரமாக நடைபெற்ற பிராந்தியத்தின் இதயப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் இந்நூலின் ஆசிரியர். பிரிட்டிஷ் அரசாங்க ஆவணங்கள், வரலாற்று நூல்கள், கலகத்தை நேரில் கண்டவர்களின் வாய்மொழி வரலாறு அனைத்தையும் உள்வாங்கி, அவற்றைக் கச்சிதமான இலக்கிய வடிவத்தினுள் பொருத்துவதில் நாவல் வென்றுள்ளது. வரலாற்றுத் துல்லியமும் கலைநுட்பமும் ஒருங்கே அமைந்த ஓர் அபூர்வமான வாசிப்பனுபவம் உங்களுக்குக் காத்திருக்கிறது.
Be the first to rate this book.