'என்னைப் பொறுத்தவரை டிராகலின் ஒவ்வொரு கவிதையும் ஓர் உன்னதமான இருப்பை உடையது. டிராகலின் கவிதைகளில் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளேன். அவை என்னை ஆக்கிரமித்து வியப்புக்குள் ஆழ்த்தி வாழ்வின் மர்மங்களை நோக்கி இட்டுச் செல் கின்றன. அவரது கவிதையின் லயம் ஒரு கனவு உருவாகுவதைப் போல ஒரு குவிமையத்தை நோக்கி எழும்பி நிரம்பி வழிகிறது. ஒரு கண்ணாடியில் தோன்றி மறையும் காட்சிகளைப் போல ஒருவர் டிராகலின் அருகில் இருந்து அவர் உருவாக்கும் காட்சிகளைக் காண முடியும், டிராகலின் வாழ்வே கூட கண்ணாடியை நிறைத்து அதைக் கடந்து போகும் காட்சிகளுக்கு ஒப்பானது.'
-ரெய்னர் மரியா ரில்கே.
Be the first to rate this book.