12 கிலோ எடையில் சுமத்திரா தீவிலுள்ள காட்டு மலர், கலிபோர்னியாவில் 115 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான மரம், 4 கிலோ எடையுள்ள வாழைப்பழத்தைத் தரும் இந்தோனேசிய வாழை, இன்று பிரபலமாக உள்ள பயிர் சுழற்சி முறையை 19-ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய கருப்பின பேராசிரியர் கார்வர், உலகிலேயே 50-க்கும் குறைவான டிகப்ரியோ மரங்கள் என்று நம்மில் பலருக்குத் தெரியாத செய்திகளை இந்நூல் கொண்டுள்ளது. நெட்டிலிங்கத்தையும் அசோகமரத்தையும் ஒன்றுதான் என நாம் நினைத்துக் கொள்வோம். தாமரையையும், அல்லியையும் ஒன்று என நினைத்துக் கொள்வோம். அது தவறு என்கிறார் லோகமாதேவி. வறுத்த கொண்டைக்கடலை காப்பியாக அருந்தப்படுவதையும் தமிழ்நாட்டின் சிதம்பரத்திற்கு அருகி லுள்ள பிச்சாவரம், உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகள் என்பதையும் புதிதாகக் கேள்விப்படுகிறேன்.
கிராம்பு, கடுகு, கொண்டைக்கடலை, கரையோர நாணல்கள், விதைகளற்ற கனிகள், ருத்ராட்சங்கள், அரசாணி (பூசணி), மக்காச்சோளம், அலையாத்தித் தாவரங்கள், அந்தரத் தாமரை பற்றிய செய்திகளில் பல எனக்குப் புதியவை. ரசனைக்குரியவை.
- டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப
Be the first to rate this book.