அண்டனூர் சுராவின் நூறு சிறுகதைகளுக்கும் உருக்கொடுத்த ஓவியன் என்கிற முறையில் சொல்கிறேன், இவரது கதைகளின் ஆழத்தைக் கலைமொழியில் ஓவியமாக மொழிபெயர்ப்பது ஒரு சவாலான செயலாக இருந்தது. அவரது எழுத்துகளின் சாயல்கள், மனித உணர்ச்சிகளின் பல்துறை அம்சங்கள், நேர்க்கோட்டுச் சிந்தனையில் இருந்து விலகிய, சமூக முரண்களின் மீள் தரிசனம் இவற்றை ஒவ்வோர் ஓவியத்திலும் உணர்வுகளின் நிழலாகப் பதிவு செய்துள்ளேன். கிறிஸ்டி நல்லரெத்தினம், ஆஸ்திரேலியா நூறு சிறுகதைகளும் நூறு ஜன்னல்களைத் திறந்து வெவ்வேறு மனித வாழ்வை நமக்குக் காட்டுகின்றன. இந்தச் சமூகத்தின் புரையோடிப்போன நோய்களான சாதிய ஏற்றத்தாழ்வு. தீண்டாமைக் கொடுமை. பெண் அடிமைத்தனம், பாலியல் வன்முறை. பட்டினித் துயரங்கள். மதவெறி. வர்க்க ஆதிக்கம், கந்து வட்டிக் கொடுமைகள் போன்றவற்றைத் தோலுரிக்கின்றன. தனிப்பட்ட மனிதர்களின் மெய்மைத்தன்மை சிதையாமல் செதுக்கப்பட்டுள்ளன. மருத்துவர் த. அறம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
இயற்பெயர் க.இராஜமாணிக்கம் கந்தர்வகோட்டை வட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சிறுகதை, புதினம். கட்டுரை. மாவட்ட வரலாறு சொல்லாய்வு என்று பல்துறைகளில் இலக்கியப் பங்களிப்பு செய்துவருகிறார். இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் வந்து புதினங்கள் மூன்று குறும்புதினங்கள் உட்பட இருபந்து ஐந்து நூல்கள் எழுதியுள்ளார். இவரது பிராண நிறக் கனவு எனும் சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை விருதும் அன்னமழகி எனும் நாவல் எழுத்து-திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு வழங்கும் ரூபாய் இரண்டு இலட்சங்கள் பரிசும் பெற்றன. மேலும் இவர் பல இலக்கிய அமைப்புகளால் விருதும் பரிசும் பெற்றவர்.
புதுக்கோட்டையை மையமாகக் கொண்டு தொடர் நூல்கள் கெயண்டு வருகிறார். புதுக்கோட்டை பன்றி நாடு முதல் புதுகை வரை (பாகம்-1) எனும் மாவட்ட வரலாறு நூலைத் தொடர்ந்து புதுகை வட்டார சொல்லகராதி எனும் நூல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளிவந்தது அண்டனூர் சுரா சிறுகதைகள் 100' எனும் க்கு தொகுப்புகள் 2004 முதல் 2024 வரையிலான சிறுகதைகளின் தொகுப்பாகம்
Be the first to rate this book.