நமது கவிதை அச்சு வராத காலத்திலிருந்து யாப்பினைத் துறந்து உணர்ச்சி நிலையில் ஒரு உயரத்தைத் துறந்து 19,20 ஆம் நூற்றாண்டுகளில் பெரும் பெரும் யுத்தங்களுக்குப் பின்வந்த நவீன கவிதை தர்க்கங்களும் சண்டைகளும் தான் கவிதை என்ற நிலையில் சற்றே முந்தைய காலத்தில் ஒரு புனைவால் தான் கவிதை அழகாகிறது என்ற கோட்பாடு நிலவுகிறது. எல்லாக் காலத்தையும் தனக்குள் கொண்டிருக்கிற கவிஞன் தான் தற்காலத்தில் வெளிப்பாட்டுத் தேவைகளையும் கண்டுகொள்கிறாள். எனக்குப் புனைவு கொண்ட ஈஸ்டர் ராஜின் பல கவிதைகளும் உவப்பாகவே இருக்கின்றன.
முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த அழகிய சில சொற்றொடர்களையும் தீவிரமான படிமங்களையும் சிறப்பான கவிதைகளையும் அடிக்கோடிட்டுச் சென்று இருந்தேன். ஆனாலும் இப்பொழுது வாசகர்களே தாங்களாக அவர்களைக் கண்டு கொள்ளும்படி மூடிவிடுகிறேன்.
எல்லோருமே மெய்மையைக் கண்டடைவதிலும் அறிவியக்கத்திலும் மிகச் சுலபமாக விரிந்து விட்டிருக்கிற ஒரு காலத்தில் நவீன கவிஞனுக்கு அப்பால் உள்ள புனைவும் உணர்வெழுச்சிகளுக்குக் கவிதைகளும்தாம் இடம்பெறும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. இவை போன்ற கவிதைகளுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.
-தேவதேவன்
Be the first to rate this book.